என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
    X

    இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது /
    • இந்த போட்டியில் ரோகித் - கோலி ஒன்றாக விளையாடவுள்ளனர்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதனை தொடர்ந்து இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் ஒருநாள் தொடரை தொடங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    Next Story
    ×