என் மலர்
கிரிக்கெட் (Cricket)

USA போட்டியின்போது சஞ்சு சாம்சனிடம் ரோகித் சர்மா கூறிய தன்னம்பிக்கை வார்த்தை..!
- குரூப் சுற்று போட்டிகளில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
- ஜிம்பாப்வே அணிக்கெதிராக வாய்ப்பு கிடைத்து 15 பந்தில் 24 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன்தான் என்று இந்திய அணி முடிவு செய்தது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோசமாக விளையாடியதால் இஷான் கிஷனை தொடக்க வீரராக களம் இறக்கியது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சூப்பர் 8 சுற்றின் போது ஜிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடி வாய்ப்பு கிடைத்தது. அதில் களம் இறங்கி 15 பந்தில் 24 ரன்கள் விளாசினார். நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் முத்திரை பதித்தார். 50 பந்தில் 97 ரன்கள் விளாசி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 196 இலக்கை இந்திய அணி எட்ட முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து சஞ்சு சாம்சனை முன்னாள், இன்னாள் வீரர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடக்க போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் வெளியில் அமர்ந்திருந்தார். இந்த போட்டியை காண ரோகித் சர்மா சென்றிருந்தார்.
அப்போது சஞ்சு சாம்சனை சந்தித்த ரோகித் சர்மா "மனமுடைந்து போக வேண்டாம். இது நீண்ட தொடர். உங்களுக்கு வாய்ப்பை கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
அன்று ரோகித் சர்மா சொன்னது சரியானதாகியுள்ளது. சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்று இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.






