என் மலர்
கிரிக்கெட் (Cricket)

உங்கள் வெற்றிக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்க அணியை வாழ்த்திய டிரம்ப்
- டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த லீக் போட்டியில் அமெரிக்க அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு எனது வாழ்த்துகள். அமெரிக்க கிரிக்கெட் அணி வலுவாக இருக்கிறது. உங்கள் வெற்றிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Next Story






