என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிஎஸ்கேவில் தொடங்கி அங்கேயே முடிகிறது.. அஸ்வின் ஓய்வுக்கு சிஎஸ்கே நெகிழ்ச்சி பதிவு
- வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது.
- சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது.
தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவரது ஓய்வுக்கு சிஎஸ்கே அணி நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சேப்பாக்கின் சொந்த சிங்கம். கேரம்-பந்தை திருப்புகிற சுந்தரன்! முதல்முறையாக மஞ்சள் நிற ஜெர்ஸியில் தூசி படிந்த சிஎஸ்கேவின் களத்தில் அறிமுகமாகி உலக அரங்கில் சுழல் பந்தில் ஆதிக்கம் செலுத்தினாய். எல்லாவற்றையும் கொடுத்தீர்கள்.
நமது பாரம்பரியத்தின் தூணாக இருந்து, சேப்பாக் கோட்டையில் கர்ஜித்தீர்கள். தெருவில் உள்ளவர்களிடமும் மரியாதையைப் பெற்றீர்கள் அஸ்வின்.
வாழ்க்கை ஒரு முழுமையான வட்டமாக அமைந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்சில் தொடங்கி அங்கேயே முடிகிறது. எப்போதும் சிங்கம். எப்போதும் எங்களில் ஒருவர்! நினைவுகளுக்கு நன்றி அஸ்வின்! எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.






