என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    Bumrah | `இதுதான் பும் பும் சர்வதேச கிரிக்கெட்டில் 8-வது இந்திய வீரர்... பும்ராவின் புது சாதனை..!
    X

    Bumrah | `இதுதான் பும் பும்' சர்வதேச கிரிக்கெட்டில் 8-வது இந்திய வீரர்... பும்ராவின் புது சாதனை..!

    • ஒரு தலைமுறையின் வீரர் என்று பும்ராவை குறிப்பிட்டுள்ளது.
    • அசாத்திய பந்துவீச்சு இந்திய அணி வெற்றியை உறுதிப்படுத்தியது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. கடந்த சில ஆண்டுகளாக எதிரணியை திணறடிக்கும் பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர் பும்ரா. நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அசாத்திய பந்துவீச்சு மூலம் இந்திய அணி வெற்றி பெறுவதை உறுதி செய்து வருகிறார்.

    அந்தவகையில் நேற்று (வியாழன் கிழமை) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக பும்ரா விளங்கினார். ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் இவரது அசாத்திய பந்துவீச்சு இந்திய அணி வெற்றியை உறுதிப்படுத்தியது.

    இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் புது சாதனை படைத்துள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. X தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், ஒரு தலைமுறையின் வீரர் என்று ஜஸ்பிரித் பும்ராவை குறிப்பிட்டுள்ளது.

    மேலும், சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8-வது இந்திய வீரர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். இதுவரை ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 117 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

    Next Story
    ×