என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஷ்ரேயா கோஷல் குரலில் ஐசிசி பெண்கள் உலக கோப்பைக்கான Anthem வெளியீடு
    X

    ஷ்ரேயா கோஷல் குரலில் ஐசிசி பெண்கள் உலக கோப்பைக்கான "Anthem" வெளியீடு

    • வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

    பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    Next Story
    ×