என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அடிலெய்டு டெஸ்ட்: மிரட்டிவிட்ட மிட்செல் ஸ்டார்க்.. 180 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்தியா
    X

    அடிலெய்டு டெஸ்ட்: மிரட்டிவிட்ட மிட்செல் ஸ்டார்க்.. 180 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்தியா

    • கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.
    • நிதிஷ் குமார் 42 ரன்களை எடுத்தார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று காலை (இந்திய நேரப்படி 9.30) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    கே.எல். ராகுல், சுப்மன் கில் முறையே 37 மற்றும் 31 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் நிதிஷ் குமார் 42 ரன்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 22 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×