என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    U19 உலகக் கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா வெற்றிபெற 278 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
    X

    U19 உலகக் கோப்பை அரையிறுதி: ஆஸ்திரேலியா வெற்றிபெற 278 ரன்களை இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

    • 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது.
    • ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.

    புலவாயோ:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.

    லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகின.

    இந்நிலையில், முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார்.

    4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×