என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சஞ்சு சஞ்சு என முழங்கிய ரசிகர்கள்.. கடுப்பான சுப்மன் கில்- வைரல் வீடியோ
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
- சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடருக்கு தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சியை முடித்து இந்திய வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்தனர். சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சுப்மன் கில் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் சஞ்சு சாம்சன் என முழங்கினர்.
அப்போது, சூர்யகுமார் யாதவ் சாம்சனை 'உள்ளூர் பையன்' என்று நகைச்சுவையாக அழைத்தார். உடனே சஞ்சு ரசிகர்களிடம் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அங்கு வந்த சுப்மன் கில் ரசிகர்களை கண்டு கொள்ளாமல் முகத்தை திரும்பி கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல ரசிகர்கள் சுப்மன் கில்லுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட கூடிய ஜித்தேஷ் சர்மாவும் அணியில் உள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அணியின் லெவனில் இடம்பெருவாரா என்ற கேள்விகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






