என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    விஜய் ஹசாரே கோப்பை: ரெயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடும் விராட்?
    X

    விஜய் ஹசாரே கோப்பை: ரெயில்வேஸ் அணிக்கு எதிராக விளையாடும் விராட்?

    • விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்
    • 3-வது போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடவில்லை.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் விளையாடுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போட்டிகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்த தொடரில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் விளையாடிய அவர் இன்று நடக்கும் 3-வது போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடவில்லை.

    இந்நிலையில் விராட் கோலி அடுத்த போட்டியில் எப்போது விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 6-ம் தேதி ஆலூரில் நடைபெறும் ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த தொடரில் முதல் 2 போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×