என் மலர்tooltip icon

    விளையாட்டு

    4-வது T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்
    X

    4-வது T20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

    • முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
    • இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதையடுத்து, 5 போட்டி கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 4-வது டி20 போட்டி கோல்டு கோஸ்டில் உள்ள கராராவில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

    Next Story
    ×