என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    ரோகித் சர்மா ஆடாதது மிகப்பெரிய இழப்பு: முன்னாள் வீரர் கருத்து

    தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்புஎன்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித் சர்மா. தொடக்க வீரரான அவர் இந்திய அணியின் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்துக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ரகானேவிடம் இருந்த துணை கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகி உள்ளார். மும்பையில் நேற்று முன்தினம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு இடது தொடையில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதில் இருந்து குணமடைய அவருக்கு 4 வார காலம் ஆகலாம். இதனால் துணைக் கேப்டனான அவர் தென் ஆப்பிரிக்காவின் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை.

    ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதுமுக வீரர் பிரியங்க் பன்சால் டெஸ்ட் அணிக்கு தேர்வாகி உள்ளார். குஜராத்தை சேர்ந்த  அவர் இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் ஆவார்.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்க தொடரில் காயத்தால் விலகி உள்ளார். அவர் ஆடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஏனென்றால் அவர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் ஆட முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமே. 

    காம்பீர்

    ரோகித் சர்மா விலகியதால் இளம் வீரருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். 

    இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வாலும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கலாம். இதனால் புதுமுக வீரரான பிரியங்க்  பன்சால்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினமே.
    Next Story
    ×