search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக்கேல் வாகன்
    X
    மைக்கேல் வாகன்

    வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டது - இந்திய ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் மைக்கேல் வாகன்

    வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதை நான் பார்க்கிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
    சவுத்தம்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண்கிறது. 

    முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது.  

    இதற்கிடையில், சவுத்தம்டன் மைதானம் அமைந்துள்ள பகுதியில் அந்நாட்டு நேரப்படி காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால், இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. போட்டிக்கான டாஸ் இன்னும் சுண்டப்படவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் உணவு இடைவேளை வரை போட்டி தடைபட்டுள்ளது.

    மழை காரணமாக போட்டி தடைபட்டுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் இங்கிலாந்து வானிலை தொடர்பாக டுவிட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதை நான் பார்க்கிறேன் #உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்’ என தெரிவித்துள்ளார்.


    இந்தியாவை கிண்டல் அடிக்கும் வகையில் மைக்கேல் வாகனின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரிலும் இந்திய வீரர்களின் விளையாட்டை மைக்கேல் வாகன் கிண்டல் அடித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
    Next Story
    ×