search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    3-வது வீரராக பேட்டிங் செய்து 10 ஆயிரம் ரன்களை எடுத்து விராட் கோலி சாதனை

    விராட் கோலி ஒரு நாள் போட்டியில் பேட்டிங் வரிசையில் 3வது வீரராக இறங்கி 10 ஆயிரம் ரன்களை எடுத்துள்ளார்.
    புனே:

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.  இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி கோலி அரை சதம் எடுத்துள்ளார்.  அவர், 66 ரன்கள் (79 பந்துகள் 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்தபோது, ரஷீத் பந்து வீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  கோலி, ராகுல் இணை 119 பந்துகளில் 100 ரன்களை எடுத்தனர்.

    இந்த போட்டியில், 3வது வீரராக இறங்கி பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை எடுத்து உள்ளார்.  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டிங் வரிசையில் 3வது வீரராக இறங்கி 330 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12 ஆயிரத்து 662 ரன்களை கடந்துள்ளார்.

    அவருக்கு அடுத்து 2வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார்.  அவர், பேட்டிங் வரிசையில் 3வது வீரராக இறங்கி 190 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இந்த பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை பேட்ஸ்மேன் குமார் சங்கக்கரா உள்ளார்.  அவர் 238 போட்டிகளில் விளையாடி 9,747 ரன்களை சேர்த்து உள்ளார்.  அவருக்கு அடுத்த இடத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஜாக்கிஸ் கல்லிஸ் (7,774) உள்ளார்.

    Next Story
    ×