search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - எம்எஸ் டோனி - ரிக்கி பாண்டிங்
    X
    விராட் கோலி - எம்எஸ் டோனி - ரிக்கி பாண்டிங்

    3-வது டெஸ்ட் போட்டியில் பாண்டிங், டோனி சாதனையை கோலி முறியடிப்பாரா?

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் இதுவரை 2 ஆட்டம் நடந்துள்ளது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்கியது.

    பகல்-இரவாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்று முன்னிலை பெறும் ஆர்வத்துடன் உள்ளன.

    இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் டோனியின் சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச போட்டிகளில் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் ரிக்கி பாண்டிங்கும், விராட் கோலியும் இணைந்து முதல் இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 41 சதங்கள் அடித்துள்ளனர்.

    3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால் விராட் கோலி புதிய சாதனை படைப்பார். சர்வதேச போட்டியில் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    சர்வதேச போட்டிகளில் ஒட்டுமொத்தமாக கோலி 70 சதங்கள் அடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 71 சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். சதம் அடிப்பதன் மூலம் அவருடன் விராட் கோலி இணைவார். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

    இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் டோனியின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார். உள்நாட்டில் இருவரும் தலா 21 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளனர். இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்துவதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்டில் வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுவார்.

    டோனி, கோலிக்கு அடுத்தபடியாக அசாருதீன் (13), கங்குலி (10), கவாஸ்கர் (10) ஆகியோர் உள்ளனர். 

    Next Story
    ×