search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    இந்திய மண்ணில் அதிக விக்கெட்: அஸ்வின் புதிய சாதனை - ஹர்பஜன்சிங்கை முந்தி 2-வது இடம்

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் எடுத்து 2-வது என்ற பெருமையை அஸ்வின் தட்டி சென்றார்.

    சேப்பாக்கம் டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. சுழற்பந்து வீரரான அவர் 43 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய மண்ணில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் கும்ப்ளேக்கு அடுத்தபடியாக அஸ்வின் 2-வது இடத்தை பிடித்தார். அவர் ஹர்பஜன்சிங்கை முந்தினார்.

    35 வயதான அஸ்வின் 76 டெஸ்டில் 391 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதில் இந்தியாவில் 268 விக்கெட் (45 டெஸ்ட்) எடுத்துள்ளார். சொந்த மண்ணில் கும்ப்ளே 350 விக்கெட் (63) வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 265 விக்கெட் (55) எடுத்துள்ளார். ஆனால் சராசரியில் கும்ப்ளே யை விட அஸ்வின் சிறப்பான நிலையில் உள்ளார்.

    இடக்கை பேட்ஸ்மேனான ஸ்டூவர்ட் பிராட்டை அஸ்வின் அவுட் செய்தார். இதன் மூலம் அவர் டெஸ்டில் இடது கை பேட்ஸ்மேன்களில் 200 விக்கெட் கைப்பற்றிய (மொத்த விக்கெட் 398 ) முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். தற்போதுள்ள வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) 190 விக்கெட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 29-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5-வது நிகழ்வாகும். கும்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக உள்ளார். இவர் 35 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

    Next Story
    ×