search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ட் - ஜடேஜா
    X
    பண்ட் - ஜடேஜா

    3வது டெஸ்ட்: ஜடேஜா, பண்ட் அடுத்தடுத்து காயம் - மாற்று வீரர்கள் அறிவிப்பு

    3வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மற்றும் பண்ட் அடுத்தடுத்து காயம் அடைந்த சூழலில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
    சிட்னி:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.  

    இதில், டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.  105.4 ஓவர்களில் அந்த அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது.

    இதில், அணி வீரர் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்தபொழுது, கம்மின்ஸ் பந்து வீச்சில் வந்த பந்தினை அடித்து விளையாட பண்ட் முற்பட்டார்.  ஆனால் அது தவறி அவரது இடது முழங்கையில் பட்டது.  இதனால் வலியால் துடித்த பண்டுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடக்கத்தில் நன்றாக ஆட தொடங்கிய பண்ட் 4 பவுண்டரிகள் விளாசினார்.  அவருக்கு காயம் ஏற்பட்ட பின்னர் அவரது ரன் விகிதம் குறைய தொடங்கியது.  67 பந்துகளில் 36 ரன்களே அவரால் எடுக்க முடிந்தது.  பின்னர் ஹேசில்வுட் பந்துவீச்சில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    இதேபோன்று இன்றைய ஆட்டத்தில் ஜடேஜாவுக்கும் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.  மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் காயம் அடைந்த பின்னர் அவரது ரன் விகிதமும் சரிந்தது.  இதனால், 37 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஜடேஜா ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்திய அணி வீரர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த காயங்களால் போட்டியில் விளையாடுவதில் அவர்களுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டு உள்ளது.  பண்டுக்கு பதிலாக சஹா கீப்பிங் செய்வார் என கூறப்படுகிறது.

    இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் 2வது இன்னிங்சில் ஜடேஜாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் பீல்டிங் செய்வார்.  இந்திய வீரர் ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்தபொழுது ஏற்பட்ட காயத்திற்காக ஸ்கேன் செய்ய கொண்டு செல்லப்பட்டார் என பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.
    Next Story
    ×