search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டீவ் சுமித்
    X
    ஸ்டீவ் சுமித்

    அதிவேகத்தில் 27-வது சதம் - ஸ்டீவ் சுமித் புதிய சாதனை

    இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சுரி அடித்தவர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்தார்.

    இந்தியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் சுமித் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

    முதல் 2 டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்த டெஸ்டில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 27-வது சதமாகும். இதன்மூலம் அவர் விராட் கோலி (இந்தியா), கிரேம் சுமித் (தென் ஆப்பிரிக்கா), ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) ஆகியோருடன் இணைந்தார்.

    ஸ்டீவ் சுமித் 136 இன்னிங்சில் 27-வது சதத்தை எடுத்தார். இதன்மூலம் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக அதிவேகத்தில் டெஸ்டில் 27 செஞ்சுரி அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். பிராட்மேன் 70 இன்னிங்சில் 27 சதம் அடித்திருந்தார். விராட் கோலி, தெண்டுல்கர் தலா 141-வது இன்னிங்சிலும், கவாஸ்கர் 154-வது இன்னிங்சிலும், மேத்யூ ஹைடன் 157-வது இன்னிங்சிலும், 27-வது சதத்தை தொட்டு இருந்தனர்.

    ஸ்டீவ் சுமித்தின் சதத்தில் 14 செஞ்சூரிகள் (62 இன்னிங்ஸ்) சொந்த மண்ணில் எடுக்கப்பட்டவையாகும். அவர் இந்தியாவுக்கு எதிராக 8-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக செஞ்சுரி அடித்து இருந்த கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோரை சமன் செய்தார். இவர்கள் இந்தியாவுக்கு எதிராக 8 சதம் அடித்திருந்தனர்.

    ஸ்டீவ் சுமித் இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஒரு சதம் அடித்தால் புதிய சாதனை படைப்பார்.

    Next Story
    ×