search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் மன்கட் முறையில் ஆரோன் பிஞ்சை அவுட் செய்யாத காட்சி
    X
    அஸ்வின் மன்கட் முறையில் ஆரோன் பிஞ்சை அவுட் செய்யாத காட்சி

    அஸ்வின் மன்கட் முறையில் ஆரோன் பிஞ்சை அவுட் செய்யாததற்கு இவர்தான் காரணம்

    பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரோன் பிஞ்சை மன்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்யாததற்கு அவரது பயிற்சியாளர் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

    துபாய்:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் கடந்த ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கேப்டனாக பணியாற்றினார்.

    அப்போது ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டம் இழக்க செய்தார். பந்து வீசுவதற்கு முன்பு கிரீசை விட்டு வெளியே வந்ததால் பட்லரை, அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்தார்.

    கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இது இருந்தாலும் அஸ்வினுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த ஐ.பி.எல். சீசனில் அவர் டெல்லி அணிக்கு மாறினார்.

    போட்டி தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கட் முறையில் பேட்ஸ்மென்களை அவுட் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அஸ்வினை அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சை டெல்லி பந்துவீச்சாளர் அஸ்வின் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.

    ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தை அஸ்வின் வீசும் போது பிஞ்ச் கிரீசை விட்டு வெளியே வந்தார். இதை கவனித்த அஸ்வின் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு பிஞ்சை எச்சரிக்கை செய்தார். அவர் மன்கவுட் முறையில் அவுட் செய்யவில்லை.

    ரிக்கி பாண்டிங்

    பாண்டிங்கின் அறிவுரையை ஏற்றதால் அஸ்வின் இப்படி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதைபார்த்து மைதானத்தில் இருந்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் வீரர்கள் சிரித்தனர்.

    Next Story
    ×