என் மலர்
செய்திகள்

இர்பான் பதான், யூசுப் பதான்
வதோதரா போலீஸ்காரர்களுக்கு ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் வழங்கிய பதான் சகோதரர்கள்
வதோதராவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ்காரர்களுக்கு பதான் சகோதரர்கள் வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கினர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், நர்ஸ்கள், தூய்மைப்பணியாளர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் முன்னிலை வகித்து பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களின் உடல்நலத்தை பற்றி கவலைப்படாமல் நோய் தொற்று தாக்கியவர்களை குணமாக்குவதிலும், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ்காரர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இர்பான் பதான், யூசுப் பதான் ஆகியோர் வதோதரா போலீஸ் கமிஷனரிடம் ‘வைட்டமின் சி’ மாத்திரைகள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளது வதோதரா போலீஸ்.
Next Story






