search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இர்பான் பதான்
    X
    இர்பான் பதான்

    தேர்வாளராக இருந்த ஸ்ரீகாந்த் இப்படி கூறுவார் என்று எதிர்பார்க்கவில்லை: இர்பான் பதான் விவரிக்கிறார்

    அறிமுகம் ஆன காலத்தில் பேட்ஸ்மேன்கள்தான் விக்கெட்டுகளை கொடுப்பார்கள் என்று ஸ்ரீகாந்த் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் இர்பான் பதான்.
    இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். 35 வயதாகும் இவர் 2003-ம் ஆண்டு 18 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2012-ம் ஆண்டு விளையாடிய பின், கடந்த வருடம் ஓய்வு பெற்றார்.

    2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்டில் அறிமுகம் ஆனார். புதுப்பந்தை ஸ்விங் செய்யும் திறமையை பெற்றிருந்ததால் இளம் வயதிலேயே புகழ்பெற தொடங்கினார். பேட்டிங் திறமையும் பெற்றிருந்ததால், அடுத்த கபில்தேவ் என்று பேசப்பட்டார். ஆனால் காயம் மற்றும் சில காரணங்களால் தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் 28 வயதிலேயே அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இவர் இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருக்கும்போது ஸ்ரீகாந்த் தேர்வுக்குழுவில் இடம் பிடித்திருந்தார். அப்போது அவர் கூறிய கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘ஆதரவு தேவையில்லை. நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால், ஏராளமானோர் போதுமான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது என்பது குறித்து பேசுவார்கள். ஆனால், எனக்கு தகுதிக்கு உண்டான எல்லாவற்றையும் பெற்றேன்.

    நான் கடைசியாக 2012-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் விளையாடினேன். அந்த போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அதன்பின் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.

    நான் விளையாடிய காலத்தை திரும்பிப் பார்க்கும்போது நான் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளதாக நினைக்கிறேன். உங்களுடைய கடைசி போட்டியை 27 வயதில் முடித்தீர்கள் என்றால், 35 வயதில் எந்த வகையில் சாதனைப்படைத்திருக்க முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள். அதை நான் செய்ததாக நினைக்கிறேன்.

    ஸ்ரீகாந்த்

    தேர்வாளர்கள் என்னை நீக்குவது குறித்து ஏதும் கூறவில்லை. நான் விளையாடும்போது தேர்வுக்குழுவில் இருந்த ஸ்ரீகாந்த சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன். இர்பான் பதான் விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை. பேட்ஸ்மேன்கள் அவர்களது விக்கெட்டுகளை கொடுக்கிறார்கள் என்றார். அவர் எதனடிப்படையில் அவர் அப்படி பேசினார் என்று என்னால் புரிந்து கொள்ளவில்லை.

    வீரர்களை தேர்வு செய்யாததற்கான காரணத்தை கூறுவதற்கான கேலிக்கூத்தான கருத்து அது. தேர்வாளர்களுக்கும் வீரர்களுக்கும் இடையில் உதவ எவ்வளவு கம்யூனிகேசன் தேவை என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
    Next Story
    ×