என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாசிம் அக்ரமை கொலைக்கூட செய்திருப்பேன்: இப்படி சோயிப் அக்தர் சொல்லக் காரணம்?
Byமாலை மலர்21 April 2020 10:56 AM GMT (Updated: 21 April 2020 10:56 AM GMT)
மேட்ச்-பிக்சிங் குறித்து வாசிம் அக்ரம் என்னிடம் பேசியிருந்தால், கொலைக்கூட செய்திருப்பேன் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த அணிகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த அணியின் வளர்ச்சி பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மேட்ச்-பிக்சிங் விவகாரத்தாலும் அந்த அணியின் பெருமை குன்றியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது பாகிஸ்தானைச் சேர்ந்த கேப்டன் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், முகமது ஆசிஃப் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்பட்டது.
ஐசிசி விசாரணை நடத்தி ஐந்து ஆண்டுகள் தடைவிதித்தது. முகமது அமிர் மட்டும் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேட்ச்-பிக்சிங் ஈடுபட்டு தண்டனை பெற்றுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் 1997 முதல் 2011 வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.
இவர் நீண்ட காலம் வாசிம் அக்ரம் தலைமையின் கீழ்தான் விளையாடியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் வாசிம் அக்ரம் மேட்ச்-பிக்சிங் குறித்து அணுகியிருந்தால் அவரை துவம்சம் செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘1990-களில் நான் சில போட்டிகளை பார்த்துள்ளேன் அதில் வாசிம் அக்ரம் தனது அற்புதமான பந்து வீச்சால் ஜெயிக்க முடியாது என்று நினைத்த போட்டியையும் பாகிஸ்தான் ஜெயிக்க உதவிகரமாக இருந்துள்ளார்.
ஒருவேளை வாசிம் அக்ரம் மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபடுமாறு என்னிடம் கூறியிருந்தால், அவரை துவம்சம் செய்திருப்பேன். அல்லது கொலைக்கூட செய்திருப்பேன். ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் அதுகுறித்து பேசியது கிடையாது. இதை நான் எப்போதும் தெளிவாக கூறுவேன்.
நான் அவருடன் ஏழு முதல் எட்டு வருடங்கள் விளையாடியிருப்பேன். கடைநிலை வீரர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்த என்னிடம் விட்டபோதிலும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தும் பொறுப்பிலும் என்னை சேர்த்துக் கொண்டார். அவருக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் இருந்தாலும் கூட என்னுடைய முதன்மை பந்து வீச்சை கருத்தில் கொண்டு பந்து வீச அனுமதித்தார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X