search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி இந்தியா
    X
    ஹாக்கி இந்தியா

    ஒடிசா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாய் வழங்கியது ஹாக்கி இந்தியா

    கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ஹாக்கி இந்தியா ஒடிசா மாநில முதல் நிவாரண நிதிக்கு 21 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
    கொரோனா வைரஸ் இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன. அடுத்த இரண்டு வாரங்கள் மிகக்கவனகமாக இருக்க வேண்டிய வாரங்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு தாராளமான நிதி வழங்கலாம் என பாரத பிரதமர் தெரிவித்திருந்தார். அதேபோல் ஒவ்வொரு மாநில அரசுகளும் தெரிவித்திருந்தன.

    இதனால் முக்கியமான விளையாட்டு அமைப்புகள் பிரதமர் நிவாரண நிதிக்கு உதவி வருகிறார்கள். ஹாக்கி இந்தியா பிரதமர் மோடி நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தது.

    இந்நிலையில் ஒடிசா மாநில மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது ஹாக்கி இந்தியா.

    ஹாக்கி இந்தியா நிர்வாகக் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக கூறும் ஹாக்கி இந்தியா இதுகுறித்து கூறுகையில் ‘‘இக்கட்டான நிலையில் தற்போது நாங்கள் அளித்துள்ள இந்த 21 லட்சம் ரூபாய் கொரோனாவுக்கு எதிராக போரிட சிறிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறோம்.

    ஒடிசா மாநிலம் கொரோனா வைரசுக்கு எதிராக சிறப்பான வகையில் போரிட்டு வருகிறது. எங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருக்கும் ஒடிசா மக்களுக்கு இந்த தொகை கூடுதலாக உதவும் என்று நம்புகிறோம்.’’ என்று தெரிவித்துள்ளது. 

    ஹாக்கி இந்தியா பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங் கூறுகையில் ‘‘ஹாக்கி இந்தியா ஒடிசா மக்களிடம் இருந்து மிகப்பெரிய அளவில் ஆதரவையும், உத்வேகத்தையும் பெற்றுள்ளது. ஹாக்கி இந்தியாவின் நிர்வாக போர்டு ஒடிசா முதல்வர் நிவார நிதிக்கு 21 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என ஒருமனதாக முடிவு எடுத்ததற்கு பெருமையடைகிறேன்’’ என்றார்.

    சர்வதேச அளவிலான ஹாக்கி தொடர்களில் ஒடிசாவில் உள்ள புவனேஷ்வரில்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரின்போது ஒடிசா அரசு ஸ்பான்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×