search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ்
    X
    விம்பிள்டன் டென்னிஸ்

    விம்பிள்டன் அமைப்பாளர்களுக்கு காப்பீடு மூலம் 100 மில்லியன் பவுண்டு கிடைக்க வாய்ப்பு

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டதால் போட்டி அமைப்பாளர்களுக்கு 100 மில்லியன் பவுண்டு காப்பீடு மூலம் கிடைக்கும் எனத் தெரிகிறது.
    உலகின் மிகப்பெரிய டென்னிஸ் தொடராக கருதப்படுவது கிராண்ட் ஸ்லாம். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் என நான்கு தொடர்கள் நடைபெறும்.

    இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்த ஆண்டு நடைபெற இருந்த விம்பிள்டன் டென்னிஸ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் முதன்முறையாக விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதேபோல் போட்டி அமைப்பாளர்களுக்கும் கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய அளவில் பாதித்தது. என்றாலும் சார்ஸ் வைரஸ் உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியபோது வைரஸ் போன்ற தொற்றுக்களால் போட்டி தடைபட்டால் அதற்கு இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டு வருகிறதாம்.

    இந்த வருடத்திற்கான தொடரையும் இன்சூரன்ஸ் செய்திருந்தார்களாம். இதன்மூலம் 100 மில்லியன் பவுண்டு காப்பீடு மூலம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×