search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ஒலிம்பிக் சங்கம்
    X
    இந்திய ஒலிம்பிக் சங்கம்

    கொரோனா தடுப்பு பணி - இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ.71 லட்சம் நிதியுதவி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கு அவர்கள் தாராளமாக உதவி செய்து வருகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யு மான கவுதம் காம்பீர் தனது 2 வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கி உள்ளார்.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரணத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ரூ. 71 லட்சத்து 14 ஆயிரத்தை நிதி உதவியாக அளித்துள்ளது.

    அனைத்து மாநில ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் விளையாட்டு அமைப்புகள் அளித்த ஆதரவுடன் இந்த நிதி உதவியை இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கி உள்ளது.


    Next Story
    ×