search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    கேப்டனாக 11 ஆயிரம் ரன்: புதிய மைல் கல்லை நோக்கி விராட் கோலி

    இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது கேப்டனாக 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை படைக்க இருக்கிறார் விராட் கோலி.
    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று மராட்டிய மாநிலம் புனேவில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    கவுகாத்தியில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்று நடக்கும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும். தொடரை சமன் செய்ய இலங்கை அணி போராடும்.

    இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவாக உள்ள இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே இன்றைய ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி புதிய மைல் கல் சாதனையை படைக்கிறார். சர்வதேச போட்டிகளில் ஒரு கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை தொட விராட் கோலிக்கு இன்னும் ஒரு ரன்னே தேவை. அந்த ரன்னை இன்றைய போட்டியில் கோலி எடுத்து சாதனை படைக்க இருக்கிறார்.

    ஒட்டு மொத்தமாக சர்வதேச போட்டியில் கேப்டனாக 11 ஆயிரம் ரன்னை 5 பேர் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் விராட் கோலி 6-வது வீரராக இணைகிறார்.

    இந்திய வீரர்களில் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்தூரில் நடந்த 2-வது 20 ஓவர் போட்டியின்போது, அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை (2633) விராட் கோலி முந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒட்டு மொத்தமாக விராட் கோலி டெஸ்டில் 7202 ரன்னும், ஒருநாள் போட்டியில் 1,609 ரன்னும், 20 ஓவர் போட்டியில் 2663 ரன்னும் எடுத்து உள்ளார்.
    Next Story
    ×