search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பான தொடக்கம் கொடுத்த வார்னர் - ப்ர்ன்ஸ் ஜோடி
    X
    சிறப்பான தொடக்கம் கொடுத்த வார்னர் - ப்ர்ன்ஸ் ஜோடி

    டேவிட் வார்னர் சதம் - நியூசிலாந்து வெற்றி பெற 416 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    சிட்னியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில், டேவிட் வார்னர் சதமடித்து அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து வெற்றிபெற 416 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
    சிட்னி:

    ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
     
    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. லாபஸ்சாக்னே இரட்டை சதமடித்து அசத்த ஆஸ்திரேலியா 454 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர், கிராண்ட்ஹோம் தலா 3 விக்கெட்டும், ஆஸ்லே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 251 ரன்னில் ஆல் அவுட்டானது. டாம் லாதம் 49 ரன்னில் வெளியேறினார். கிளென் பிலிப்ஸ் அரை சதமடித்தார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 251 ரன்னில் ஆல் அவுட்டானது. 

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லியான் 5 விக்கெட்டும், பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடர்ந்தது. பொறுப்புடன் ஆடிய டேவிட் வார்னர் சதமடித்தார். ஜோ பர்ன்ஸ் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபஸ்சாக்னே அரை சதமடித்தார்.

    ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டேவிட் வார்னர் 111 ரன்னுடனும், லாபஸ்சாக்னே 59 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 416 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
    Next Story
    ×