search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மித், விராட் கோலி
    X
    ஸ்மித், விராட் கோலி

    டெஸ்ட் தரவரிசையில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்: கோலி - ஸ்மித் இடையே கடும் போட்டி

    ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார்.

    தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-க்கு மேல் இருந்தது.

    இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

    வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேவேளையில் ஸ்மித் பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 928 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    மயங்க் அகர்வால்

    இருவருக்கும் இடையில் மூன்று புள்ளிகளே வித்தியாசம். 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.

    வங்காளதேச அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் மயங்க் அகர்வால் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 759 புள்ளிகளுடன் ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.
    Next Story
    ×