என் மலர்

    செய்திகள்

    கேதர் ஜாதவ், டோனி
    X
    கேதர் ஜாதவ், டோனி

    கடைசி 5 ஓவரில் மந்தமான ஆட்டம் - டோனி, கேதர்ஜாதவ் மீது ரசிகர்கள் பாய்ச்சல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவரில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, கேதர் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் 31 ரன்னில் வீழ்ந்து முதல் தோல்வியை தழுவியது.

    இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து முற்றுப்புள்ளி வைத்தது.

    இந்திய அணி கடைசி கட்டத்தில் போராடாமல் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    ரி‌ஷப்பந்த்- ஹர்திக் பாண்டியா ஜோடி இருக்கும் வரை அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ரி‌ஷப்பந்த் 32 ரன்னில் வெளியேறினார். 45-வது ஓவரில் பாண்டியா 45 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 31 பந்துகளில் 71 ரன்கள் தேவைப்பட்டது.

    ஒரு ஓவருக்கு 14 ரன்கள் அடிக்க வேண்டி இருந்தது. இது மிகவும் கடினமானது என்பது எல்லோருக்கும் தெரியும். களத்தில் டோனியும், கேதர் ஜாதவும் இருந்தனர்.

    இருவரும் அதிரடியாக விளையாடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது. இருவரும் பெரும்பாலும் ஒவ்வொரு ரன்னாகவே எடுத்தனர். கடைசி 5 ஓவரில் இருவரும் ஆடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    கடைசி 31 பந்துகளில் இந்த ஜோடி 20 ஒரு ரன்னை (சிங்கிள்) எடுத்தது. 7 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் மட்டுமே அடித்தனர்.

    அதிகமான ரன்கள் தேவைப்பட்ட அந்த ஆட்டத்தில் கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். டோனி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து இருந்தாலும் கடைசி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்தாமல் ஒவ்வொரு ரன்னாக எடுத்தது ரசிகர்களை மிகுந்த கோபம் அடைய செய்தது.

    டோனி-கேதர் ஜாதவ் ஜோடி கடைசி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

    வெற்றி பெற வேண்டும் என்ற எந்த நோக்கமும் இல்லாமல் இருவரும் ஒவ்வொரு ரன்னாக அடித்ததை மீம்ஸ் போட்டு வறுத்து எடுத்து உள்ளனர்.

    “ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவரான டோனி பாகிஸ்தானின் அரைஇறுதி வாய்ப்பை சிறப்பாக முடித்து வைத்தார்” என்று ரசிகர்கள் சிலர் பதிவில் தெரிவித்து உள்ளனர்.

    அதாவது பாகிஸ்தான் அரை இறுதிக்கு வரக் கூடாது என்பதற்காகவே டோனி-கேதர் ஜாதவ் ஜோடி இப்படி வேண்டுமென்றே ஆடியதாக சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலமானவர்களும் இருவரது பேட்டிங்கையும் விமர்சித்து உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இருவரும் ஆமை வேகத்தில் ஆடியதை தெண்டுல்கர் விமர்சித்து இருந்தார். அவரது விமர்சனத்தை உண்மையாக்கும் விதமாக டோனி-கேதர் ஜோடியின் ஆட்டம் நேற்று இருந்தது.

    அதே நேரத்தில் டோனிக்கு, கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, “டோனி பவுண்டரி அடிக்கவே கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் அவர்களது ஆட்டம் முன்னேற்றமாக இருக்கும் என்றார்.

    டோனியும், கேதர் ஜாதவும் பவுண்டரி அடிக்கவே முயன்றனர் என்று ரோகித் சர்மாவும் விளக்கம் அளித்து உள்ளார்.
    Next Story
    ×