search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - கங்குலி நம்பிக்கை
    X

    உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - கங்குலி நம்பிக்கை

    உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்தார்.
    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலியின் கேப்டன்ஷிப் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன்ஷிப்புடன் ஒப்பிடக்கூடாது. இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துணைகேப்டன் ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அவருக்கு நல்ல ஆதரவாக இருப்பார்கள். ஹர்திக் பாண்ட்யா நல்ல பார்மில் இருக்கிறார். அவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறும். இங்கிலாந்து மண்ணில் உலக போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பானதாகும். அங்கு 2017-ம் ஆண்டில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 2009-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி நன்றாகவே ரன் குவித்து வருகிறது.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாகும். இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். 2003-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணியை, தற்போதைய இந்திய அணியுடன் ஒப்பிடக் கூடாது. இரு அணிகளும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்ததாகும். தற்போதைய இந்திய அணி உலக கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.

    இந்திய அணிக்கு நெருக்கடி இருப்பது நல்லது தான். நெருக்கடியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும். மற்ற அணிகளுக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்கிறது. உலக கோப்பை போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக் காது.

    இவ்வாறு கங்குலி கூறினார்.
    Next Story
    ×