என் மலர்

  செய்திகள்

  நான்கு போட்டியில் 22 சிக்சர்கள்: அபாயகரமான அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த திணறும் பந்து வீச்சாளர்கள்
  X

  நான்கு போட்டியில் 22 சிக்சர்கள்: அபாயகரமான அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த திணறும் பந்து வீச்சாளர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிக்சர் மழை பொழிந்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் அந்த்ரே ரஸலை கட்டுப்படுத்த முடியாமல் பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள. #IPL2019
  ஐபிஎல் 2019 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வார்னர், பேர்ஸ்டோவ் ரன்கள் குவித்து வரும் வரும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான அந்த்ரே ரஸல் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்.

  அவர் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ளார். நான்கிலும் பேட்டிங் செய்ய களம் இறங்கி 77 பந்துகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் 22 சிக்சர்கள் அடங்கும். 12 பவுண்டரிகள் அடங்கும். இரண்டு முறை நாட்அவுட். அவரது சராசரி 103.5 ஆகும். ஸ்டிரைக் ரேட் 268.83 ஆகும். சிக்சர் மட்டும் பவுண்டரி மூலமாகவே 180 ரன்கள் குவித்துள்ளார்.

  அவருக்கு அடித்தபடியாக அதே அணியின் நிதிஷ் ராணா 12 சிக்சர்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். டி வில்லியர்ஸ் 11 சிக்சர்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல், பேர்ஸ்டோவ், வார்னர் தலா 10 சிக்சர்கள் அடித்துள்ளனர்.

  ஐதராபாத் அணிக்கெதிரான முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 44 பந்தில் 87 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது. சித்தார்த் கவுல் வீசிய 18-வது ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரியும் அடித்தார். புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் தலா இரண்டு சிக்சர், பண்டரிகள் விளாசினார். 19 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் கொல்கத்தா வெற்றி பெற்றது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 14.3 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். 17 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 48 ரன்கள் குவித்தார். இதனால் கேகேஆர் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

  டெல்லிக்கு எதிராக 9.1 ஓவரில் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களம் இறங்கினார். 28 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 62 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் 185 ரன்னாக உயர முக்கிய காரணமாக இருந்தார்.  ஆர்சிபி-க்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 ரன்னை சேஸிங் செய்தது. கேகேஆர் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கினார். கடைசி மூன்று ஓவரில் 53 ரன்கள் தேவைப்பட்டது.

  18-வது ஓவரில் மூன்று சிக்சர்களும், 19-வது ஓவரில் நான்கு சிக்சர்களுடன் விளாசினார். 13 பந்தில் 7 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்து கேகேஆர் வெற்றி பெற்றது.
  Next Story
  ×