என் மலர்
செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட்
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #SAvSL
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டீன் எல்கரும், மார்கிராமும் களமிறங்கினர்.
மார்கிராம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 60 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, குயின் டி காக் நிதானமாக ஆடினார். அவர் 86 ரன்னில் வெளியேறினார்.

மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். இதனால், தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ, காசன் ரஜிதா ஆகியோர் 3 தலா விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்துள்ளது. #SAvSL
Next Story






