search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள்: இத்தாலிக்கு வாருங்கள்- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்
    X

    புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள்: இத்தாலிக்கு வாருங்கள்- மெஸ்சிக்கு ரொனால்டோ சவால்

    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×