search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்
    X

    முதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்காள தேசம்

    டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது. #BANvWI
    டாக்கா:

    வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் வங்காள தேசம் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியின் கிரன் பாவெல், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வங்காள தேசத்தினர் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால்  வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.



    ஷாய் ஹோப் 43 ரன்களும், கீமோ பவுல் 36 ரன்களும், ரூஸ்டன் சேஸ் 32 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்தது.

    வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிசுர் ரகுமான், மஷ்ரப் மோர்டசா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லித்தன் தாஸ் களமிறங்கினர். தமிம் இக்பால் 12 ரன்னிலும், லித்தன் தாஸ் 41 ரன்னிலும், இம்ருல் காயேஸ் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஷாகிப் அல் ஹசன் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஷாகிப் அல் ஹசன் 30 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில் வங்காள தேசம் 35.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 1 - 0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருதை மஷ்ரப் மோர்டசா வென்றார். #BANvWI
    Next Story
    ×