என் மலர்

  செய்திகள்

  கவுதம் காம்பிர் திடீர் ஓய்வு- இந்தியா வென்ற இரண்டு உலகக்கோப்பையிலும் ஜொலித்தவர்
  X

  கவுதம் காம்பிர் திடீர் ஓய்வு- இந்தியா வென்ற இரண்டு உலகக்கோப்பையிலும் ஜொலித்தவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த கவுதம் காம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #Gambhir #GautamGambhirRetires #GautamGambhir
  இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

  கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கவுதம் காம்பிருக்கு கடந்த சில வருடங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.  இந்நிலையில் இன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 37 வயதாகும் கவுதம் காம்பீர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார்.
  Next Story
  ×