என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேட், பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பம்- ரன் மெஷினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சுதர்சன் பட்நாயக்
Byமாலை மலர்5 Nov 2018 10:46 PM GMT (Updated: 5 Nov 2018 10:58 PM GMT)
ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு மணல் சிற்பம் வரைந்து தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #Viratkohli #SudarsanPatnaik
லக்னோ:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தீபாவளி விழாவில் பங்கேற்க சுதர்சன் பட்நாயக் சென்றுள்ளார். அங்குள்ள மைதானத்தில் அவர் பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி, இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் 24 சதம், 19 அரைசதங்களுடன் 6,331 ரன்கள் குவித்துள்ளார். 216 ஒருநாள் போ்டடியில் 38 சதங்கள், 48 அரைசதங்களுடன் 10,232 ரன்கள் குவித்துள்ளார். 62 டி20 போட்டியில் 18 அரைசதங்களுடன் 2,102 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Viratkohli #SudarsanPatnaik
Next Story
×