என் மலர்

  செய்திகள்

  வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 236/5
  X

  வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 236/5

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. #BANvZIM
  ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

  இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் நேற்று தொடங்கியது.

  டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாமில்டன் மசகட்சா, பிரியன் சாரியும் களமிறங்கினர்.  பிரியன் சாரி 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய பிரெண்டன் டெய்லர் 6 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய மசகட்சா 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சியன் வில்லியம்ஸ் பொறுப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். சிக்கந்தர் ராசா 19 ரன்களில் வெளியேறினார்.

  இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர் மூர் 37 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சக்பவா 20 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

  வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டும், அபு ஜெயத், நஸ்முல் இஸ்லாம், மகமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #BANvZIM
  Next Story
  ×