search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறிமுக டெஸ்டில் சதம்- பிரித்வி ஷா-வுக்கு கோலி பாராட்டு
    X

    அறிமுக டெஸ்டில் சதம்- பிரித்வி ஷா-வுக்கு கோலி பாராட்டு

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான அறிமுக டெஸ்டில் சதமடித்த பிரித்விஷாவுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli #PrithviShaw #INDvWI
    ராஜ்கோட்:

    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 181 ரன்னில் சுருண்டு ‘பாலோ’ஆன் ஆனது.

    தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அஸ்வின் 6 விக்கெட்டும் (முதல் இன்னிங்ஸ் 4+ 2-வது இன்னிங்ஸ் 2), குல்தீப் யாதவ் 6 விக்கெட்டும் (1+5) கைப்பற்றினார்கள்.

    அறிமுக டெஸ்டில் சதம் அடித்த (134 ரன்) 18 வயதான பிரித்விஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார். அவரை இந்தியஅணி கேப்டன் விராட்கோலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிரித்விஷா தனது முதல் டெஸ்டிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத் தினார். அவர் ஆதிக்கம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. அவர் மாறுபட்ட திறமை கொண்டவர். அதனால் தான் டெஸ்ட் அணிக்குள் நுழைய முடிந்துள்ளது. கேப்டன் பார்வையில் இருந்து இது உற்சாகமூட்டுகிறது.

    ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிக்க வேண்டும் என்று விரும்பினோம். அவர் போட்டிகளில் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர். பவுலர்களுக்கு சாதகமில்லாத ஆடுகளத்தில் முகமது‌ஷமி அருமையாக வீசினார்.

    இங்கிலாந்து, இந்தியா நிலமைகளை ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மிகப்பெரிய சவால். இங்கு நம்மிடம் உள்ள திறமைகளுக்கு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது புரிந்ததே. வெஸ்ட்இண்டீஸ் அணியின் ஆட்டம் பற்றி பேசக்கூடாது. அவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து மாறுவார்கள்.

    எதிர் அணி என்ன செய்யப்போகிறது என்பதில் கவனம் செலுத்த விரும்பவில்லை. நாங்கள் துல்லியமாக வென்றோம் என்று மட்டுமே கூற முடியும்.

    இவ்வாறு கோலி கூறியுள்ளர்.

    இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. #ViratKohli #PrithviShaw #INDvWI
    Next Story
    ×