search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்திடம் நாங்கள் மோசமாக தோற்கவில்லை- விராட்கோலி
    X

    இங்கிலாந்திடம் நாங்கள் மோசமாக தோற்கவில்லை- விராட்கோலி

    இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் மோசமாக தோற்கவில்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ENGvIND #ViratKohli
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி போராடி தோற்றது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்னும் எடுத்தன.

    இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

    இதனால் இந்தியாவுக்கு 464 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. தொடக்க வீரர் லோகேஷ்ராகுல் (149 ரன்), விக்கெட் கீப்பர், ரி‌ஷப்பாண்ட் (114 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

    இந்திய அணி 94.3 ஓவர்களில் 345 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது இதனால் இங்கிலாந்து அணி 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ராகுலும், ரிசப்பாண்டும் தோல்வியை தவிர்த்து ‘டிரா’ செய்ய கடுமையாக போராடினார்கள். ஆனால் இறுதி வரை அவர்களால் போராட இயலவில்லை.

    ஆண்டர்சன் 3 விக்கெட்டும், ஆதில் ரஷித், சாம்குர் ரான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி மூலம் இந்திய அணி 5 டெஸ்ட் கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

    பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், சவும்தானில் நடந்த 3-வது டெஸ்ட் 60 ரன் வித்தியாசத்திலும் ஏற்கனவே இந்தியா தோற்று இருந்தது. நாட்டிங்காமில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    நாங்கள் 1-4 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளோம். இது மோசம் இல்லை. பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது.

    லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற டெஸ்ட்களில் நாங்கள் மோசமாக தோற்கவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் நன்றாக விளையாடின. இதனால் கடும் போட்டி இருந்தது.

    இந்தியா- இங்கிலாந்து இடையேயான இந்த தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சிறந்த விளம்பரம் ஆகும். இரு அணிகளும் வெற்றிக்காக விளையாடியதால் ரசிகர்கள் மைதானத்துக்கு திரண்டு வந்தார்கள்.

    இங்கிலாந்து அணி தொழில் ரீதியாக பயமில்லாமல் ஆடியது. இரண்டு அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட முடியும் என்பதை உணர்ந்து இருந்தனர். அவர்கள் (டிரா’ செய்ய வேண்டும் என்ற வகையில் ஆடவில்லை.

    இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய வி‌ஷயங்களை அறிந்தோம். இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் சாம்குர்ரான் சிறப்பாக செயல்பட்டார். ஓய்வு பெற்ற அலஸ்டர்குக் இங்கிலாந்தில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKholi
    Next Story
    ×