search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓவல் டெஸ்ட்- அலஸ்டைர் குக் அரைசதம்- இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 123-1
    X

    ஓவல் டெஸ்ட்- அலஸ்டைர் குக் அரைசதம்- இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 123-1

    லண்டன் ஓவல் டெஸ்டில் அலஸ்டைர் குக், மொயீன் அலி நிதான ஆட்டத்தால் இங்கிலாந்து தேனீர் இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமானர். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டனர். அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜா இடம்பிடித்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டைர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.



    உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் பந்து வீச்சை தொடங்கினார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா பந்தில் குக் கொடுத்த கேட்சை ரகானே பிடிக்க தவறினார். அடுத்த 2-வது பந்தில் பும்ரா வீசிய பந்தில் மொயீன் அலி அடித்த பந்தை விராட் கோலி பிடிக்க தவறினார்.



    கண்டத்தில் இருந்து தப்பிய இருவரும் அதன்பின் நிலைத்து விளையாட தொடங்கினார்கள். அலஸ்டைர் குக் 139 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இங்கிலாந்து அணி முதல் நாள் தேனீர் இடைவேளை வரை 59 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்துள்ளது. அலஸ்டைர் குக் 66 ரன்னுடனும், மொயீன் அலி 23 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×