search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும்- கேப்டன் விராட்கோலி நம்பிக்கை
    X

    டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும்- கேப்டன் விராட்கோலி நம்பிக்கை

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND #INDvENG #ViratKholi
    நாட்டிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்னும், இங்கிலாந்து 161 ரன்னும் எடுத்தன.

    168 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 352 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 521 ரன் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து 317 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதன் முலம் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 30-ந்தேதி சவுதம்டனில் தொடங்குகிறது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்னும், 2-வது இன்னிங்சில் 103 ரன்னும் எடுத்து இந்திய கேப்டன் விராட்கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்ட மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழுமையான டெஸ்ட் போட்டியாக இருந்தது.

    ஒரு பேட்ஸ்மேனாக என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்தோம். அதை களத்தில் செய்து காட்டினோம். அதன் பின் பந்து வீச்சாளர்கள் தங்களது பணியையும் கச்சிதமாக செய்தனர்.

    பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்தனர். ஸ்லிப் பகுதியில் கேட்சுகளை துல்லியமாக பிடித்ததால் இப்போட்டியில் வெற்றி பெற்றோம்.

    இத்தொடரில் வேகமாக வீசக்கூடிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும் இந்தியர்களாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் இன்னும் நிறைய டெஸ்டில் விளையாடும் போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக உருவாகுவார்கள்.

    டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும் என்று நம்புகிறோம். 0-2 என்ற கணக்கில் இருந்து 3-2 என்ற கணக்கில் தொடரில் வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று வெற்றி பெற விரும்புகிறோம். இந்த உத்வேகத்தை எஞ்சிய இரு டெஸ்டிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #ViratKholi
    Next Story
    ×