search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பை கால்பந்து - சுவீடனின் அதிரடியை இங்கிலாந்து சமாளிக்குமா?
    X

    உலகக் கோப்பை கால்பந்து - சுவீடனின் அதிரடியை இங்கிலாந்து சமாளிக்குமா?

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற உள்ள கால்இறுதி ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WorldCup2018

    சமரா:

    உலககோப்பை கால்பந்து போட்டியில் 3-வது மற்றும் 4-வது கால்இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.

    சமரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சுவீடன்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுவீடன் ‘லீக்’ ஆட்டத்தில் தென்கொரியா (1-0), மெக்சிகோவை (3-0) வென்று ஜெர்மனியிடம் (1-2) தோற்று, கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் துனிசியா (2-1), பனாமா (6-1) அணிகளை வென்று பெல்ஜியத்திடம் தோற்று (0-1) இருந்தது. 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டிஷூட்டில் தான் வென்றது.

    1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி சுவீடனின் அதிரடியை சமாளிப்பது சவாலானது. அந்த அணி பின்களத்தில் வலுவாக இருக்கிறது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இங்கிலாந்து- 8, சுவீடன்-7-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இங்கிலாந்து அணியில் ஹாரிகேன் முதுகெலும்பாக இருக்கிறார். ஸ்டெர்லிங், லிங்கார்டு போன்ற முன்னணி வீரர்களும் உள்ளனர். சுவீடன் அணியில் கிரண்விஸ்ட், போர்ஸ்பெர்க், பெர்த் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரவு 11.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியா- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

    ரஷியா ‘லீக்’ ஆட்டத்தில் சவுதி அரேபியா (5-1), எகிப்து (3-1) அணிகளை தொடர்ந்து உருகுவேயிடம் 0-3 என்ற கணக்கில் தோற்றது. 2-வது சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்தது.

    குரோஷியா அணி தோல்வி அடையவில்லை. 2-0 என்ற கணக்கில் நைஜீரியாவையும், 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவையும், 2-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தது. 2-வது சுற்றில் டென்மார்க்கை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தியது.

    குரோஷியா அணி பலம் பொருந்தியவை என்பதால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாகும். இதேபோல கோல்கீப்பர் அகிள்பீவ் முதுகெலும்பாக இருக்கிறார். குரோஷியா அணியில் மோட்ரிச், மென்டிச், ரகட்டிச் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகள் மோதிய போட்டியில் குரோஷியா 1 ஆட்டத்தில் வென்றது. 2 ஆட்டம் ‘டிரா’ ஆனது. #WorldCup2018

    Next Story
    ×