என் மலர்

  செய்திகள்

  உலகக்கோப்பை கால்பந்து - மெக்சிகோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஸ்வீடன்
  X

  உலகக்கோப்பை கால்பந்து - மெக்சிகோவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஸ்வீடன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்வீடன் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #MEXSWE #FIFAWorldCup2018 #FIFA2018

  மாஸ்கோ:

  உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெருகிறது. ஒரு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ அணி, ஸ்வீடனை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஸ்வீடன் அணி களமிறங்கியது.

  போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் போட தொடர்ந்து முயற்சித்தனர். ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. 

  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டம் ஸ்வீடன் அணிக்கு சாதகமாக அமைந்தது. 50-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் அகஸ்டின்சன் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 1-0 என முன்னிலை பெற்றது.  அதைத்தொடர்ந்து 62-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கிரான்குவிஸ்ட் கோல் அடித்தார். இதனால் ஸ்வீடன் அணி 2-0 என முன்னிலை பெற்றது.

  அதன்பின் 74-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணிக்கு ஒரு போனஸ் கோல் கிடைத்தது. மெக்சிகோ அணி வீரர் அல்வரேஸ் அந்த கோலை அடித்து கொடுத்தார். மெக்சிகோ அணி இறுதிவரை கோல் அடிக்காததால் ஸ்வீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.   இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய ஸ்வீடன் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மெக்சிகோ அணி இரண்டாவது இடம் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018 #FIFA2018 #MEXSWE
  Next Story
  ×