search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அணியின் வெற்றி, சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
    X

    இந்திய அணியின் வெற்றி, சுனில் செத்ரிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SachinTendulkar #SunilChhetri #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள், இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் செத்ரி”, என சச்சின் கூறியுள்ளார்.



    ஏற்கனவே சுனில் செத்ரி போட்டியை காண வருமாறு ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு சச்சின் ஆதரவாக பதிவு செய்திருந்தார். நேற்றைய போட்டியை காண 8 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×