search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #SRHvDD #VIVOIPL

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரின் 35-வது லீக்கும், இன்றைய 2-வது ஆட்டமும் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் ப்ரித்வி ஷா, மேக்ஸ்வெல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    மேக்ஸ்வெல் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து ப்ரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ப்ரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 25 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் ப்ரித்வி ஷா 36 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார்.



    ப்ரித்வி ஷா ஆட்டமிழந்ததும் டெல்லி அணியின் ஸ்கோர் வேகத்தில் சறுக்கல் ஏற்பட்டது. 16-வது ஓவரின் முதல் பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். இவர் 36 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 19 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 13 பந்தில் 23 ரன்கள் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.



    பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில் ஹேல்ஸ் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மேக்ஸ்வெல் தவறவிட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஹேல்ஸ் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். 

    5 ஓவர்களில் ஐதராபாத் அணி 34 ரன்கள் எடுத்திருந்தது. 6-வது ஒவரை அனேஷ் கான் வீசினார். முதல் பந்தையே அவர் நோ-பாலாக வீசினார். இதையத்து பிரி ஹிட்டில் தவான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து அந்த ஓவரின் 3,4 மற்றும் 6-வது பந்துகளில் ஹேல்ஸ் சிக்ஸர் அடித்தார். இதனால் ஆறு ஓவர்களில் ஐதராபாத் அணி 61 ரன்கள் குவித்தது. 

    8-வது ஓவரை மிஷ்ரா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹேல்ஸ் கிளின் போல்டானார். ஹேல்ஸ் 31 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். 10 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது. மிஷ்ரா வீசிய 11-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்டானார். அதன்பின் மணிஷ் பாண்டே களமிறங்கினார்.



    வில்லியம்சன், மணிஷ் பாண்டே இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஐதராபாத் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை பிளங்கீட் வீச அந்த ஓவரின் முதல் பந்திலேயே மணிஷ் பாண்டே ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து யூசுப் பதான் களமிறங்கினார்.

    கடைசி இரண்டு ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை போல்ட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே பதான் சிக்ஸர் அடித்தார். அதைத்தொடர்ந்து மூன்றாவது பந்தில் பதான் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டேன் கிறிஸ்டேன் வீசினார். அந்த ஓவரில் யூசுப் பதான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். 



    இறுதியில் ஐதராபாத் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 32 ரன்களுடனும், யூசுப் பதான் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக பந்துவீசிய அமித் மிஷ்ரா 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். 
    Next Story
    ×