search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- ஆர்சிபி-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது சென்னை
    X

    ஐபிஎல் 2018- ஆர்சிபி-ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது சென்னை

    புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #CSKvRCB
    ஐபிஎல் தொடரின் 35-வது ஆட்டம் புனேயில் இன்று முதல் ஆட்டமாக நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா (3) மற்றும் ஹர்பஜன் சிங் (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பார்தீவ் பட்டேல் 53 ரன்னும், டிம் சவுத்தி 36 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள்.

    பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    வாட்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். அம்பதி ராயுடு 25 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான த்ருவ் ஷோரே 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    5-வது விக்கெட்டுக்கு எம்எஸ் டோனியுடன் வெயின் பிராவோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. 18-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் டோனி. அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். இதற்குப் பதிலாக வீசிய பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.




    இந்த ஓவரின் கடைசி பந்தில் பிராவோ ஒரு ரன் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி 23 பந்தில் 31 ரன்னும், பிராவோ 17 பந்தில் 14 ரன்களும் எடுத்து கடைவி வரை களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் 7 வெற்றி மூலம் 14 புள்ளிகள் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது.
    Next Story
    ×