என் மலர்

  செய்திகள்

  டோனியால் எந்தவொரு கேப்டனுக்கும் கடினமான நிலையை உருவாக்க முடியும் - டு பிளிசிஸ்
  X

  டோனியால் எந்தவொரு கேப்டனுக்கும் கடினமான நிலையை உருவாக்க முடியும் - டு பிளிசிஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டோனியால் எந்த அணி கேப்டனுக்கும் கடினமான நிலையை உருவாக்க முடியும் என டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK #MSDhoni
  டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராக நேற்று புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்தது. இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனியின் அதிரடி ஆட்டமும் முக்கிய காரணம். இவர் 22 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

  இந்த ஐபிஎல் தொடரில் டோனியின் ஆட்டம் அபாரமாக உள்ளது. இதுவரை மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார். இதுபோன்று டோனி ஃபார்மில் இருக்கும்போது எந்தவொரு பந்து வீச்சாளருக்கும், கேப்டனுக்கும் சிக்கல்தான் என்று டு பிளிசிஸ் கூறியுள்ளார்.  எம்எஸ் டோனி குறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில் டோனி சூப்பர் டூப்பர் ஃபார்மில் உள்ளார். ஆகவே, இதுபோன்று உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும்போது அவருக்கு பந்து வீசுவதற்கு பவுலருக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

  சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு நீங்கள் வைடாக பந்து வீசினால் கூட, அவரால் சிக்சருக்கு பந்தை தூக்க முடியும்.  டோனி ஏராளமான ஆப்சனை பெற்றுள்ளார். அந்த ஆப்சன்களால் டோனியால் எந்தவொரு பந்து வீச்சாளரையும், கேப்டன்களையும் சிக்கலுக்குள் உள்ளாக்க முடியும். ஏனென்றால், எந்தவொரு பந்தையும், அவர் விரும்பும் திசையில் விளாசுவார். இதுபோன்ற அவருடைய ஃபார்ம் எங்கள் அணிக்கு முக்கியமானது’’ என்றார்.
  Next Story
  ×