என் மலர்

  செய்திகள்

  அகில இந்திய கிரிக்கெட்: 56 அணிகள் பங்கேற்பு- சென்னையில் 1-ந்தேதி தொடக்கம்
  X

  அகில இந்திய கிரிக்கெட்: 56 அணிகள் பங்கேற்பு- சென்னையில் 1-ந்தேதி தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அகாடமி (ஒய்.எஸ்.சி.ஏ.) சார்பில் 56 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி சென்னையில் 1-ந்தேதி தொடங்குகிறது.
  சென்னை:

  யங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் அகாடமி (ஒய்.எஸ்.சி.ஏ.) சார்பில் ஆண்டு தோறும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.

  இந்த ஆண்டுக்கான 49-வது ஒய்.எஸ்.சி.ஏ. கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி வருகிற 1-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது. ஜூன் 24-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

  தமிழ்நாடு கிரிக்கெட் சங்க ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போட்டியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், ஐ.ஒ.சி., இந்திய கடற்படை (மும்பை), கேரளா கிரிக்கெட் சங்கம் விஜயா பாங்கி, சென்னை சுங்க இலாகா, லயோலா, குருநானக், எஸ்.ஆர்.எம். உள்பட 56 அணிகள் கலந்து கொள்கின்றன.

  சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். இது தவிர பல்வேறு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படுகிறது.
  Next Story
  ×