என் மலர்

  செய்திகள்

  முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி - கோவை, சென்னை அணிகள் முதலிடம்
  X

  முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி - கோவை, சென்னை அணிகள் முதலிடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை தடகள போட்டியின் ஆண்கள் பிரிவில் கோவை அணியும், பெண்கள் பிரிவில் சென்னை அணியும் முதலிடம் பிடித்துள்ளன.

  சென்னை:

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை “முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டு போட்டிகள்” நடைபெற்றது. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கோவை மாவட்டம் 25 புள்ளிகளை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பையும், திருநெல்வேலி மாவட்டம் 10 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் பெற்றன.

  பெண்கள் பிரிவில் சென்னை மாவட்டம் 20 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பையும், ஈரோடு மாவட்டம் 11 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும் பெற்று கோப்பைகளை வென்றனர்.

  முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தை பெற்ற 20 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், 2-ம் இடம் பெற்ற 20 பேருக்கு தலா ரூ.75 ஆயிரமும், 3-ம் இடம் பெற்ற 20 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

  Next Story
  ×