search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சேதப்படுத்திய புகார் - ஸ்மித், வார்னர் ஓராண்டு விளையாட தடை
    X

    பந்தை சேதப்படுத்திய புகார் - ஸ்மித், வார்னர் ஓராண்டு விளையாட தடை

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #SteveSmith #DavidWarner #CameronBancroft #BallTampering #CricketAustralia
    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வீரர்கள் அறையில் இருநாட்டு வீரர்கள் மோதல், களத்தில் மோதல், ரசிகர்களுடன் வாக்குவாதம் என பல சர்ச்சைகளில் ஆஸ்திரேலியா சிக்கி இருந்தது.

    அதோடு புதிதாக பந்தை சேதப்படுத்திய பிரச்சனையில் சிக்கியது அவமானத்தை ஏற்படுத்தியது. கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது.

    பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவியும், வார்னரின் துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சுமித்துக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தது. அதோடு 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. பான்கிராப்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது. 

    இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் சுதர்லேண்ட் வார்னர் மற்றும் ஸ்மித் உடனடியாக நாடு திரும்புவார்கள். அவர்கள் மீதான தடை குறித்து 24 மணி நேரத்துக்குள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்,

    இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. குறிப்பாக, பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாட தடை விதித்துள்ளது என விளையாட்டு இணைய தளங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SteveSmith #DavidWarner #CameronBancroft #BallTampering #CricketAustralia #Tamilnews
    Next Story
    ×